மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா தொடங்கியது

News

oi-C Jeyalakshmi

|

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என்ற போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மாசி திருவிழா நேற்று மார்ச் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் பெருவிழா நேற்று மார்ச் 1 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மார்ச் 9ம் தேதி திங்கள் கிழமை விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. 7.30 மணி முதல் 9 மணி வரை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி பேசினார். பிற்பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி பூஜை, 9 ஆயிரம் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

நாளைய தினம் மார்ச் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை யானை மீது களப ஊர்வலமும், 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை காலை மற்றும் இரவு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மார்ச் 6ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்ற மகா பூஜை நடைபெறுகிறது. 9ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவது சிறப்பட்சம் பெரிய சக்கர தீவெட்டி அலங்கார பவனியும் நடைபெறுகிறது.

10ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களப பவனியும், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 4.30 மணிக்கு அடியந்திர பூஜை குத்தியோட்டமும், காலை 11 மணிக்கு அன்னதானம் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடைபெறும்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா

கேரள மாநிலத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலையாக போற்றப்படுகிறது. பெண்கள் இத்தலத்திற்கு இருமுடி கட்டி செல்கிறார்கள். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்திலேயே இந்த கோயில் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது.

பொங்கல் விழாவில் கண்ணகி வரலாற்றை அடிப்படையாக கொண்ட பாடல்கள் பாடப்படுகிறது. இத்தகைய பழம்பெருமை வய்ந்த இந்த கோயிலில் மாசி மாதம் பத்து நாட்கள் நடக்கும் பொங்கலா எனப்படும் பொங்கல் திருவிழா உலக புகழ்ப்பெற்றதாகும். விழாவில், கேரளா மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, பொங்கல் திருவிழாவை காண வெளிநாட்டினரும் வருகை தருவது சிறப்பம்சம்.

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் பெருவிழா நேற்று மார்ச் 1 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மார்ச் 9ம் தேதி திங்கள் கிழமை விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

விழாவையொட்டி, தாலப்பொழி, கத்தியோட்டம், புறத்தெழுநெல்லி உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகிறது. மார்ச் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காப்பு அவிழ்க்கப்பட்டு கொடியிறக்கப்படும். பின்பு நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் குருதி பூஜையுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed