உங்க ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், ராகு கூட்டணியா அந்த விசயத்தில் படு கெட்டியாம்!

சென்னை: என்னதால் வீட்டில் மகாலஷ்மி மாதிரி மனைவி இருந்தாலும் சிலர் செகண்ட் சேனல் பார்க்க ஆசைப்படுவார்கள். ஒரு சிலர் டூயல் சிம் போட்டிருந்தாலும் பல சிம்கார்களை போட்டு பேசுவார்கள் இதெல்லாம் ஜாதகத்தில் சுக்கிரனுடன் செவ்வாய், ராகு சேர்ந்திருந்தால் அந்த தசாபுத்தி காலத்தில் தவறான சேர்க்கை, நடத்தை ஏற்படுகிறது.

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஆறு ராசிகளும் ஆண் ராசி என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆண் ராசிகளில் பிறந்தவர்கள் மனோதைரியம் மிக்கவர்கள். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளும் பெண் ராசிகளாகும். இந்த ராசிகளில் பிறந்தவர்களை, தன்னம்பிக்கை வாழ வைக்கும்.

கண்ணோடு கண் நோக்கினாள் என்று கண்ணைத்தான் முக்கிய காரணமாகச் சொல்வார்கள். சூரியன், சந்திரன் பார்வைக்குரிய கிரகங்கள். ஆனால், காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கிரகம் சுக்ரன்தான். இதுதான் பாலியல் இந்த உணர்வுகளுக்கெல்லாம் காரணகர்த்தாவாகிறார்.

சந்திரன், சூரியன், சுக்கிரன்

சுக்கிரனுடன் சந்திரன் கூட்டணி அமையப் பெற்ற ஜாதகர்கள் பெண்களிடம் பேசுவதற்கு கூச்சப்படுவார்கள்.

சூரியன் சுக்கிரன் சேர்க்கை அவ்வளவாக நல்லதில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடலாம்.

காதலா? காமமா?

காமம் அவசியம் தான். அது சமையலில் உப்பு போல இருக்கவேண்டும். கொஞ்சம் கூடினாலும், குறைந்தாலும் சமைத்ததை குப்பையில் கொட்ட வேண்டியதுதான். வாழ்க்கையும் அப்படித்தான். காம உணர்வுக்கு காரகன் சுக்கிரன் உடன் பாவகிரகங்களுடன் சம்மந்தப்படும்பொழுது சமூகம் வரைந்து வைத்த லட்சுமண ரேகையை மனிதர்கள் தாண்டுகிறார்கள்.

கிரகங்களின் சேர்க்கை

லக்னம், ராசி, மூன்றாமிடமாகிய போகஸ்தானம், ஏழாமிடமாகிய களத்திரஸ்தானம், பன்னிரெண்டாம் இடமாகிய அயனசயன ஸ்தானம் ஆகிய ஒன்றில் சுக்கிரன் இருந்து பாவிகளாகிய சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன் இணைவதோ அல்லது பார்வை பெறுவதோ ஒருவரின் காம உணர்வை அதிகமாக்கி விடும்.

செவ்வாய் சுக்கிரன் கூட்டணி

ஒருவருக்கு சுக்கிரதிசை நடக்கும் போது காம உணர்ச்சி அதிகமா இருக்கும். சுக்கிரன்தான் காமத்திற்கு பிரதான கிரகம். ரத்தகாரகன் செவ்வாய் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அந்த தசாபுத்தி காலத்தில் தடுமாற்றம் ஏற்படும். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடலாம். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

தடுமாற்றம்

சுக்கிரனோடு சனி இருந்தால் மாறுபட்ட நிலையில் உறவு முறை கொள்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணி இருந்தாலும் ஒரு கிரகத்தின் தசா, புத்தி நடக்கும் போது இது போன்ற கள்ளத் தொடர்புகள் எற்படுகின்றன. அதனாலதான், ரொம்ப நல்ல மனுசன், புத்தி கெட்டுப்போயி இப்படி பண்ணிட்டாரே என்று பேசுகின்றனர்.

பரிகாரம் என்ன?

சுக்கிரனுடன் ராகு சேர்ந்திக்கும் ஜாதக அமைப்பு கொண்டவர் மனைவியிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். எண்ணிய காரியங்களை எண்ணியபடியே முடிப்பதில் வல்லவர்கள். ராகு காலத்தில் துர்கா தேவியை வழிபடலாம். சுக்கிரன் கேது சேர்க்கை பெற்றவர்கள் ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். விநாயகப் பெருமானை வழிபடலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் யில் பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.