சுக்கிர பகவானுக்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்வோம் வாங்க!

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சுக்கிர பகவான் ஜெயந்தி சிறப்பு ு:

சென்னை: ப்ருகு மகரிஷிக்கும் கியாதிக்கும் பார்கவ கோத்திரத்தில் மகனாக பிறந்த களத்திர காரகனான சுக்கிர பகவானுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

உலகத்தில் பெண்களை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? பிறந்த நாள் கொண்டாட பிடிக்காதவர்கள் இருக்கிறார்களா? சாக்லேட் பிடிக்காதவர்கள் இருக்கிறார்களா? ரோஜாப்பூவை பிடிக்காதவர்கள் இருக்கிறார்களா?

அதெல்லாம் கிடக்கட்டுங்க! எவ்வளவு வேலை இருந்தாலும் குளுகுளு ஏசியில் தூக்க வாய்ப்பு கிடைத்தால் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? கலர் கலரா கனவு காண விரும்பாதவர்கள் யாரும் உளரோ?

அதைவிட முக்கியமா துணிக்கடையை பார்த்தால் புதுத்துணி வாங்காத, புதுத்துணியை உடுத்த விரும்பாத, புதுசு புதுசா நகை அணிய விரும்பாத, ப்யூட்டி பார்லருக்கு போக விரும்பாத, நீண்ட கூந்தலை விரும்பாத, மருதானி வைத்துக்கொள்ள விரும்பாத, வாசனை மிகுந்த பூ வைத்துக்கொள்ள விரும்பாத

ஆண்களை கவரும்விதமாக ஆடை அணிய விரும்பாத, அடிக்கடி தன் அழகை ரசிக்கிரார்களா என ஒரக்கண்ணால் பார்த்து திருப்த்தி அடையாத, சுவையான உணவை விரும்பாத எட்டாவது உலக அதிசய பெண்களும் இருக்கிறார்களா?

கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். ஆமாம்! பெண்களை பிடிக்காதவர்களும் இருக்கமாட்டார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் வரை பெண்களை விரும்புவதும் ரோஜாப்பூக்களின் அழகில் மயங்குவதும் காலம் காலமாக நடந்துக்கொண்டுதான் இருக்கும்.

ஏனென்றால் மேலே கூறி அனைத்திற்கும் காரகர் இன்றைய ஹீரோ சுக்கிர பகவான் தாங்க!

காதல், காதலர்கள் இரண்டிற்க்குமே காரகர் சுக்கிரனேதாங்க! காதலை பறை சாற்றும் உலக அதிசயமான தாஜ்மகால் போன்ற அழகான கட்டிடத்திற்க்கும் காரகர் சுக்கிரன்தாங்க! ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ல் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 1ம் தேதியிலிருந்தே ரோஜா பூக்களிற்க்கு ஏற்படும் தட்டுபாடு காதலையும் சுக்கிரனின் மகத்துவத்தையும் பறை சாற்றும்.

குளிர்ச்சி, மகிழ்ச்சி, வெற்றி, பாராட்டு, ஆறுதல், அன்பு இவை அனைத்திற்க்கும் காரகர் சுக்கிரபகவானே தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

விழாக்கள், கொண்டாட்டங்கள், எழில், நறுமணம், வாழ்த்துக்கள் இவையனைத்திற்க்கும் காரகர் சுக்கிரன்.

நம் வாழ்வின் சந்தோஷ தருணங்கள் எதுவென்றாலும் அதில் முதன்மையாய் நிற்பது சுக்கிரன்தான். சுக்கிரன் இல்லாமல் சந்தோஷம் என்பது ஒருவருக்கு கனவிலும் கிடையாது. ஓருவர் ஜாதகத்தில் சுக்கிரன் 6/8/12. மற்றும் நீச நிலை அடைந்திருந்தாலும் கூட சந்தோஷம் சிறிதளவேணும் இருந்தாலும் அது சுக்கிரனின் அருள்கொடைதான் காரணம்.

ஜோதிடத்தில் "குணப்படுத்துதல்" என்ற வார்த்தையின் அதிபதி சுக்கிரன் தான். நாம் படும் பிரச்சனை அனைத்திலிருந்தும் விடுதலை தருபவர் சுக்கிரன் தானாம். கருவரை முதல் கல்லரை வரை நமக்கு பணம் தேவைபடுகிறது. பணப்புழக்கத்தை தரும் கிரகம் சுக்கிரன் என்பது நமக்கல்லாம் தெரியும்தானே! எந்தொரு பிரச்சனையின் தீர்வை உற்று நோக்கினாலும் அதில் சுக்கிரனின் பங்கு இருப்பது புரியும். நோயாளிகளின் நோயை குணப்படுத்தி் சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்க்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். மனவருத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன். சுகத்தினை தரும் பெண்களும் சுக்கிரன். படுக்கையும் சுக்கிரன்.

ரோமானியர்களும்கூட வீனஸ் தேவதையை (அதாங்க நம்ம ஊர் சுக்கிரன்) குணமளிக்கும் கடவுளாக (Temple of Divine Goddess Healing and Balancing.) போற்றுகின்றனர். அவர்களும் வீனஸ் தேவதையை தாய் மற்றும் திருமணத்திற்க்கான பெண்தெய்வமாக போற்றி வணங்குகின்றனர். வீனஸ் தேவதை கடல் நுரையில் தோன்றியதாக கூறுகின்றனர். நமது சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீ மகாலகக்ஷமி தாயார் பார்கடலில் உதித்ததும் பொருத்தமே அல்லவா?

சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த மந்திரத்திற்கு ஒரு முக்கிய ஆற்றல் இருக்கிறது. அது என்னவென்றால், இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் தரும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் அது. சுக்கிரபகவானின் நல்ல குணத்தை கண்டுதான் சிவபெருமான் இந்த மந்திரத்தை சொல்லிகொடுத்தார். இவருடைய வாகனம் கருடன். பெருமாளுக்கு உகந்த கருடவாகனம் பெற்றவர். பார்ப்பதற்கு வெள்ளை உருவமாக இருப்பதால் இவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார்

தேய்பிறை தசமி திதியும்

பூசம் நட்சத்திரத்தில் சுக்கிர ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த விழா ஆனது இந்த வருடம்

15/08/2017ல் ஆவணி 30ல்

வெள்ளிக்கிழமையான இன்று

தசமி திதியில பூச நட்சத்திரத்தில்

சுக்கிரன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

ஜோதிட ரீதியாக சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் யார்?

1. சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப மற்றும் துலாம் ராசியை லக்னமாகவோ சந்திரா லக்டனமாகவோ கொண்டவர்கள்.

2. சுக்கிரன் ரிஷபம் அல்லது துலா ராசியில் ஆட்சி பெற்றவர்கள் மற்றும் மீனத்தில் உச்சமடைந்தவர்கள், கன்னியில் புதன் சந்திரனோடு சேர்ந்து நின்று நீசபங்க ராஜயோகம் அடைந்தவர்கள்.

3. லக்னம் சுக்கிரன் சாரத்தில் அமையப்பெற்றவர்கள்.

4. பஞ்ச மகா புருஷயோகத்தில் மாளவியா யோகம் பெற்றவர்கள்.

5. சுக்கிரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக அமையப்பெற்றவர்கள்

6. எந்ந லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள்.

7. சுக்கிரன் திரிகோணத்தில் நின்றவர்கள்.

8.சுக்கிரன் சூரியனை கடந்து நின்று சுபவெசியோகம் பெற்றவர்கள்.

சுக்கிர பகவானின் பிறந்த தினமான இன்று சுக்கிரனை வணங்குவதும்

ஸ்ரீ மகாலக்ஷமி வழிபாடும்,சப்த கன்னியரில் இந்திரானி வழிபாடும்

அவருடைய அருளாசியை பெற்று மகிழ்ச்சியான தருணங்களை மேன்மேலும் பெற்று வாழ்வோமாக!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? ் யில்