பாம்பு கடிப்பது போல கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா

சென்னை: பகல் கனவு பலிக்காது. அதே நேரத்தில் சிலருக்கு ஆழ்ந்த உறக்கத்தில் காணும் கனவு பலிக்கிறது. அதிகாலையில் காணும் கனவு பலிக்கிறது. வீடு எரிவதாகவும் தானியம் சேமிப்பதை கண்டால் செல்வம் சேரும்.

வாழ்க்கையில் முன்னேற கனவு காணுங்கள் என்று சொன்னார் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஜோதிடத்திற்கும் கனவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நமக்கு வரும் சுபமான, அசுபமான செயல்களை கனவுகள் மூலம் உணர்த்தும்.

டிவியில் நாகினி சீரியல், நந்தினி சீரியல் பார்த்து விட்டு படுத்தால் ஒரே பாம்பு கனவாகத்தான் வரும். பாம்பு கொத்தி ரத்தம் வருவது போல கனவு கண்டு திடுக்கிட்டு விழிப்பார்கள். அது நல்லதா கெட்டதா என்ற யோசனை ஓடும்.

பணம் வரும் காலம்

மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்கள் நிறைந்திருப்பது போல கனவு கண்டால் செல்வம் சேரும். வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால் செல்வம் சேரும். அருவருப்பான மனிதர்கள்,காகம்,மீன்,இரத்தம்,விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால் செல்வம் சேரும். ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பது போல கனவு கண்டால் செல்வம் பெருகும்.

விலங்குகள் கனவில் வந்தால்

இளம் பெண்,மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து,வாசனைப் பொருட்களை படுக்கையில் அணிந்து,அமர்ந்திருந்தால் புகழ்பெறும் காலம்

இளம் பெண் தாமரை மலர் ஏந்தி வருவதைப் பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் காலமாகும். காளைமாடு அரசன், பசு,குதிரை,பிடிப்பதாகக் இவைகளைப் கண்டால் குடும்பம் மேன்மை பெறும் சேவல்,தரும் ஆபத்து மிருகங்கள்,பெரிய மரம்,பறவை தங்கநிற இவைகளைப் பிடிப்பதாகக் கண்டால் அதிர்ஷ்டம் ஏற்படும். கோவிலை, கோவில் சிலையை அலங்காரம் செய்வதாகக் கனவு கண்டால் நல்ல அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

வீடு கட்டுவதாக கனவு

பெற்றோர்,நண்பர்களை,மக்களைப் பிடிப்பதாக கனவு கண்டால் நீண்ட புகழ் கிடைக்கும். அரசனுடன் இருப்பதாகவும் தேவர்களுடன் பேசுவதாகவும் கண்டால் உயர்வடையும் நிலையைத் தரும். வீடு கட்டுவதாகவும்,மரம் நடுவதாகவும், பண்ணை அமைப்பதாகவும் கண்டால் கனவு புகழ்பெறுவார்கள். மலர்.தாமரை,வெள்ளைப்,பூமாலை,ஆபரணம் இவைகளைப் பெறுவதாகக் கண்டால் பெறும் புகழ் பெருவார்.

சொந்த வீடு வாங்க வாய்ப்பு

குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். யானை நமது கனவில் வந்தால் பெரும் செல்வம் வரப்போகிறது என்று பொருள். யானை மீதேறி சவாரி செய்வது போல கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு அமையும்.

மாம்பழ கனவு

மாம்பழம்,பசு சாணம்,இவைகளைக் கண்டால் பெறும் காலம் அதிர்ஷ்டமாகும். காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையை ஓட்டிச் செல்வதாகவும் கனவு கண்டால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மிருகங்களுடன் சண்டையிடுவதாகக் கண்டால் அதிர்ஷ்டம் அடிக்கும். மாடிப்படியில், மரத்தில், மலைமீது ஏறுவதாகக் கனவு கண்டால் உயர்ந்த நிலை கிடைக்கும்.

பாம்பு கனவு

கனவில் பால் குடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும். பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால் அதிர்ஷ்டம் கூடிவரும். வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும். பணம்,சாதம்,வெற்றிலை,பாக்கு,தானியம், இவைகளைப் பெறுவதாகவும்,சாதத்தை உண்பதாகவும், கோவிலில் பால் அபிஷேகம் செய்யப்படுவதாக கனவு கண்டால் லாபம் கிடைக்கும்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.