பாகுபலி படப்பிடிப்பு தளத்தை படம்பிடித்த 360 டிகிரி சுழலும் கேமரா – வீடியோ உள்ளே

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘பாகுபலி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிகப்பெரிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் சரித்திர பின்னணியில் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனைகளை படைத்தது.

இரண்டு பாகமாக உருவாகிய இப்படத்தின் முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

முதல்பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தின் ஒரு புகைப்படம்கூட வெளிவராத சூழ்நிலையில், நேற்று ‘பாகுபலி-2’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை இணைத்து இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

‘பாகுபலி’ படப்பிடிப்பு தளத்துக்குள் படக்குழுவினரை தவிர்த்து ஒரு குண்டூசிகூட நுழைய முடியாத அளவுக்கு மிகவும் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்குள் 360 டிகிரியில் சுழலும் கேமரா ஒன்று அங்கு நடக்கும் விஷயங்களை படம்பிடித்து வந்திருக்கிறது.

இது படக்குழுவினர் சம்மதத்துடன் சுழன்று வந்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்திற்குள் நடக்கும் விஷயங்களை இந்த கேமரா அச்சு அசலாக பதிவு செய்திருக்கிறது.

அதேபோல், படத்தில் நடிப்பவர்களும் படப்பிடிப்பு தளத்தில் தங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் எங்கு படமாக்கப்படுகிறது என்பதை விளக்கும் காட்சிகளும், அவர்கள் எப்படி படப்பிடிப்பு தளத்திற்குள் இருக்கிறார்கள் என்பதையும் இந்த கேமரா அழகாக படம்பிடித்திருக்கிறது.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே…