`பாம்பாவது.... புலியாவது...;விஜய் சேதுபதி சொல்லும் கதை!’ `சூப்பர் டீலக்ஸ்’ டிரெய்லர்

வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (22/02/2019)

கடைசி தொடர்பு:17:41 (22/02/2019)

விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இன்று அதன் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். நான்கு வெவ்வேறு தளங்களில் நடக்கும் கதைகளைக் கொண்டு அந்தாலஜி வகையில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே சேகர் ஆகியோர் கதை எழுதியிருக்கின்றனர். பி.சி ஸ்ரீராம், பி.எஸ் வினோத், நீரவ் ஷா ஆகியோர் இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நீண்டநாள்களான நிலையில், சமீபத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில், படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படம் குறித்து தியாகராஜன் குமாரராஜா விகடனுக்கு அளித்த பேட்டியில், ``என் படங்கள் மூலமா கருத்துச் சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. இந்தக் கதைக்கு ஷில்பா கேரக்டர் தேவைப்பட்டது. மூன்றாம் பாலினத்தினர் படும் கஷ்டங்கள், வலிகளைச் சொல்ற படமல்ல இது. `வேம்பு கேரக்டரில் சமந்தா நடிச்சிருக்காங்க. அவங்க பெண்ணியத்தைப் பற்றிப் பேசலை. ஷில்பாவும், வேம்புவும் கதாபாத்திரங்கள்... அவ்வளவுதான்!" என்று கூறியிருக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 29-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க