அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை!

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெற்று இனி சில நாட்களுக்கு தொடர் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது. கோவை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்றிலிருந்து இது தீவிரமடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் தற்போது வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது. இதுவும் இன்றிலிருந்து தீவிரமடையும்.

இனி தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று வீசும் திசையை பொறுத்து சமயங்களில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதிக உள்ளது .சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை அல்லது இரவு நேரங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed