உறவினர்கள் இடத்தில் உழைப்பாளர்கள்..! அசரவைத்த அழைப்பிதழ்

திருமணத்துக்கு கொடுக்கும் அழைப்பிதழ்கள் பல பிரத்யேக வடிவமைப்புகளில் வரத் தொடங்கிவிட்டன. விதவிதமாகக் கல்யாண அழைப்பிதழ்களைத் தேர்வு செய்து விருந்தினர்களுக்கு கொடுப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட். அதுவும் இன்றைய இளைஞர்கள் தங்கள் கல்யாண அழைப்பிதழ்கள் வித்யாசமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் மெனக்கெடுகின்றனர். தற்போது இந்த ட்ரெண்ட் ஃபீவர் கிரகப்பிரவேச அழைப்பிதழ்களிலும் தொற்றிக்கொண்டுவிட்டது. 


 

தஞ்சாவூரை சேர்ந்த ஆதி என்பவர் தன் வீட்டின் புதுமனை புகுவிழா அழைப்பிதழை மிகவும் வித்தியாசமாக அச்சிட்டிருக்கிறார். அதில் எழுதப்பட்டுள்ள வாக்கியங்கள் மிகவும் இயல்பாகவும் ரசிக்குபடியும் உள்ளன. ‘பால் காய்ச்ச போறோம்...’ இதுதான் அந்த அழைப்பிதழின் தலையங்கம். மேலும் அந்த அழைப்பிதழில் உறவினர்களின் பெயருக்குப் பதிலாக வீடு கட்டிய மேஸ்திரி, கொத்தனார், தச்சர், பெயின்டர் என அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அழைப்பிதழ் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் செம வைரல். அந்தக் குடும்பத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.