எங்களை பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.. ராகுல் காந்தி உருக்கமான டிவிட்!

Delhi

oi-Shyamsundar I

|

டெல்லி: பல ஆண்டுகளாக என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் பிரதமர் மற்றும் நாட்டின் முன்னாள் பிரதமர்களுக்கு பாதுகாப்பை வழங்கி வந்தனர். அதேபோல் பிரதமர் மற்றும் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர். பல முக்கிய தலைவர்களுக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பாதுகாப்பு பல தலைவர்களிடம் இருந்து விலகிக் கொள்ளப்பட்டது. அதன்பின் தற்போது காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பும் விலகிக் கொள்ளப்பட்டுள்ளது.

விரிவான ஆய்வுக்கு பிறகு இந்த சிறப்பு பாதுகாப்பை விலக்குவதாக அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் தற்போது எஸ்பிஜி பாதுகாப்பு படையினருக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி செய்துள்ள டிவிட்டில், பல ஆண்டுகளாக என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோரதிகளுக்கு நன்றி. உங்களின் பங்களிப்பிற்கும், தொடர் ஆதரவிற்கும் நன்றி. அன்பான பல விஷயங்களை கற்றுத்தந்த இந்த பயணத்திற்கு நன்றி. உங்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வாழ்த்துகள், என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed