கூடுதல் படைகள் குவிப்பு.. கண்காணிக்கும் டிரோன்கள்.. அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்பு!

Delhi

oi-Shyamsundar I

|

12,000 போலீஸ் குவிப்பு... அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு

டெல்லி: அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வர உள்ளதால் நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளனர்.

1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் வழக்கு தொடுக்கப்பட்டதற்கான காரணம் ஆகும். இந்தியாவில் மக்கள் பலரும் எதிர்பார்க்கும் வழக்காக இது உள்ளது.

சந்திப்பு

இன்று காலையில்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தர பிரதேச மாநில தலைமை செயலாளரை சந்தித்தார். அவரிடம் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசனை செய்தார். அதன்பின் அம்மாநில டிஜிபி உடனும் ஆலோசனை செய்தார். இதையடுத்து நாளை தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தீர்ப்பு

நாளை தீர்ப்பு வருவதை அடுத்து உத்தர பிரதேசத்தில் பல்வேறு அடுக்குகளாக பாதுகாப்புகள் போடப்பட்டு இருக்கிறது. அதன்படி முதல் பாதுகாப்பு திட்டம் தோல்வி அடைந்தால் வேறு திட்டத்தை செயல்படுத்துவார்கள். இப்படி 3 திட்டங்களை போலீஸ் தரப்பு போட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் இதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.

பாதுகாப்பு

இதற்காக 4 ஆயிரம் பாராமிலிட்டரி படைகள் உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். இன்று இரவு கூடுதலாக படை வீரர்கள் களமிறக்கப்பட உள்ளனர். எந்த விதமான தீர்ப்பு வந்தாலும், கலவரம் ஏற்படாமல் இருக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

ராணுவ வீரர்கள்

அதேபோல் ராணுவ வீரர்கள் மும்பை, டெல்லி, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு செய்வார்கள். தென்னிந்தியாவை விட வடஇந்தியாவில் அதிக கலவரம் வர வாய்ப்புள்ளதால் அங்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

என்ன கடிதம்

அதேபோல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதால் மாநிலங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. உளவுத்துறையை வைத்து மாநில பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். உளவுத்துறை அறிக்கையை கவனமாக கண்காணியுங்கள். கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவியுங்கள், என்றுள்ளது.

டிரோன்

அயோத்தியில் டிரோன் மற்றும் கேமரா பொருத்தப்பட்ட பலூன்கள் மூலம் பாதுகாப்பு பணிகளை செய்ய இருக்கிறார்கள். இந்த தீர்ப்பின் போது பாதுகாப்பு பணிகளை செய்வதற்காக பாதுகாப்பு படையினர் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக பயிற்சி எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed