மாணவரை சுட்ட வழக்கு.. பாத்ரூமில் வழுக்கி விழுந்துடாதீங்க.. குற்றவாளி விஜய்க்கு நீதிபதி அட்வைஸ்!

Chennai

oi-Shyamsundar I

|

சென்னையில் பயங்கரம்.. பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு

சென்னையில் மாணவரை சுட்ட வழக்கில் கைதாகி இருக்கும் இளைஞர் விஜயை பாத்ரூமில் வழுக்கி விழுந்துடாதீங்க என்று செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னை: சென்னையில் மாணவரை சுட்ட வழக்கில் கைதாகி இருக்கும் இளைஞர் விஜயை பாத்ரூமில் வழுக்கி விழுந்துடாதீங்க என்று செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் நடந்த துப்பாக்கி சூட்டில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 5ம் தேதி சென்னையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

சென்னையில் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் நண்பர் விஜய்தான் முகேஷை சுட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

துப்பாக்கியால்

சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தை சேர்ந்தவர் முகேஷ். விஜய் மற்றும் இவரின் நண்பர் விஜய், இருவரும் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும் போது துப்பாக்கி வெடித்து முகேஷ் பலியானார். தெரியாமல் சுட்டதால் முகேஷ் பலியானதாக விஜய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சரண்

முகேஷ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி இறந்தார். அதே சமயம் விஜய் வீட்டை விட்டு வெளியே ஒடி தலைமறைவானார். இவரை போலீசார் தீவிரமாக தேடினார்கள். அதன்பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

அனுமதி தந்தனர்

இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார், முகேஷை விசாரிக்க அனுமதி கேட்டனர். முகேஷை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும், துப்பாக்கி எப்படி கிடைத்து என்று விசாரிக்க வேண்டும் என்று கூறி நீதிபதியிடம் அனுமதி கேட்டனர். முகேஷுக்கு ஜாமீன் வழங்காத நீதிபதிகள், அவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தனர்.

அட்வைஸ்

அதோடு, காவல் நிலையத்தில் பாதுகாப்பாக இருங்கள். அங்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்து விடாதீர்கள்., என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். பொதுவாக இதுபோல கைது செய்யப்படும் இளைஞர்கள் போலீஸ் நிலையத்தில் கையை உடைத்துக் கொள்கிறார்கள். மாவு கட்டு போடுகிறார்கள்.

என்ன எச்சரிக்கை

இந்த புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகும். அப்போதெல்லாம் அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டனர் என்று போலீஸ் விளக்கம் கொடுக்கும். அதை உணர்த்தும் விதமாக தற்போது நீதிபதிகளே குற்றவாளி விஜய்யை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed