முத்தலாக் முறைக்கு எந்தெந்த நாடுகள் தடை விதித்துள்ளன தெரியுமா

டெல்லி : இஸ்லாமிய பெண்களுக்கு எதிரானது முத்தலாக் முறை என்று இந்தியா மட்டுமின்றி வேறு எந்தெந்த நாடுகள் அறிவித்துள்ளன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முத்தலாக் முறைக்கு இடைக்காலத் தடை விதித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இஸ்லாமியர்கள் திருமணச்சட்டம் மற்றும் விவகாரத்து தொடர்பாக விரிவான சட்டங்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தரவிட்டுள்ளது.

பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த தீர்ப்பால் இந்தியா முத்தலாக் முறை இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது. வேறு எந்தெந்த நாடுகள் முத்தலாக் முறை இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது என்பதை பார்க்கலாம்:

பாகிஸ்தான்
ஜோர்டான்
எகிப்து
துனிசியா
வங்கதேசம்
ப்ரூனே
ஐக்கிய எமிரேட்ஸ்
இந்தோனேசியா
ஈராக்
இலங்கை
துருக்கி
சிப்ரஸி
சிரியா
அல்கேரியா
ஈரான்
மலேசியா