அதிமுக முதல்வர் வேட்பாளர் அக். 7ல் அறிவிப்பா.. வாய்ப்பில்லை ராஜா.. நயினார் நாகேந்திரன்

Chennai

oi-Jeyalakshmi C

|

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றும் மேலும் தள்ளிப்போகும் என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் பற்றிய முடிவு எட்டப்படவில்லை.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே தங்களின் ஆதரவாளர்களுடன் தனித்தனியே பேசி வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் யார் என்று அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு தாவிய நயினார் நாகேந்திரன் மாநில துணைத்தலைவராக இருக்கிறார். குமரி மாவட்ட பாஜக பொறுப்பாளராக இருக்கும் அவர் இன்று அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்று அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றும் மேலும் தள்ளிப்போகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யோகம் யாருக்கு இருக்கு இபிஎஸ் ஒபிஎஸ் ஜாதகம் சொல்வதென்ன

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த நபர்களுக்கு பதவி கொடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி பாஜகவின் நயினார் நாகேந்திரன் கருத்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் அதிமுக காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed