மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா.. 3 மாவட்டங்களில் கடுமையான லாக்டவுன் அமல்

Mumbai

oi-Velmurugan P

|

மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 6,112 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 44 பேர் கொரோனா காரணமாக ஒரே நாளில் மரணம் அடைந்தனர். மாநில அரசின் சுகாதாரத் துறையின் கணக்குப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,159 பேர் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 6,112 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,876,32 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் 44765 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் 19,89,963 கோவிட்19 நோயாளிகள் நோய் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக இதுவரை 51713 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 1,55,88,324 மாதிரிகளை அம்மாநிலம் நேற்று வரை பரிசோதித்துள்ளது.

மகாராஷ்டிரா அரசு மூன்று மாவட்டங்களுக்கு வார இறுதி நாட்கள் கடுமையான லாக்டவுன் விதிமுறைகளை அறிவித்துள்ளது. யவத்மால், அகோலா மற்றும் அமராவதி ஆகிய மாவட்டங்களில் சமூக விலகல் விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட உள்ளன.

மகாராஷ்டிராவில் புனே, நாசிக், நாக்பூர், வர்தா, யவத்மால், அமராவதி, அகோலா மற்றும் புல்தானா ஆகிய எட்டு மாவட்டங்களில் கடந்த வாரத்தில் புதிய கோவிட்19 கேஸ்கள் சராசரியாக 8 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநில அரசின் கூற்றுப்படி, அகோலா அமரவதி மற்றும் புல்தானாவில் கொரோன பாசிட்டிவ் கேஸ்கள் விதிகம் 25.79 சதவிதம், 37.55 சதவீதம் மற்றும் 25.19 சதவீதமாக உள்ளது. யவத்மாலில் 17.47 சதவீதம், வர்தா 18.03 சதவீதம், நாக்பூர் 16.75 சதவீதம், நாசிக் 14.62 சதவீதம், புனே 13.04 சதவீதம் ஆக உள்ளது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed