`45 மையங்கள்; 17,000 ஊழியர்கள், 36,000 போலீஸ்! தேர்தல் முடிவுகளுக்குத் தயாராகும் தமிழகம்

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (22/05/2019)

கடைசி தொடர்பு:18:00 (22/05/2019)

டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை எண்ணப்பட உள்ளன. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது.

தமிழகத்தில் மட்டும் 45 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்குத் தபால் ஓட்டு, மின்னணு ஓட்டு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு சுற்றின் எண்ணிக்கை, வாக்கு எண்ணும் மையத்தில் தொடர்ந்து அறிவிக்கப்படும். அதேபோல், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மற்றும் ஆணையத்தின் அதிகாரபூர்வ மொபைல் செயலியில் பதிவேற்றப்படும். 

கிட்டத்தட்ட எண்பதுக்கும் அதிகமான பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படும். அவர்களின் ஒப்புதல் பெற்றே சுற்றுகளின் முடிவுகள் அறிவிக்கப்படும். கிட்டத்தட்ட 36,000-த்துக்கும் அதிகமான போலீஸாரும், 19 துணை ராணுவப் படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். இந்த 45 மையங்களில் அதிகபட்சமாகத் திருவள்ளூரில் 34 சுற்றுகளும், மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 19 சுற்றுகளும் எண்ணப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கையில் 17,000 பேர் ஈடுபடவுள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க