Breaking News Live: அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது!

Delhi

oi-Shyamsundar I

|

டெல்லி: அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.

இந்த சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூரியது. இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர். இதன் மீதான விசாரணை நடந்து வந்தது

Newest First Oldest First

ஶ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை- ஜம்முவின் 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்

ம.பி.

போபால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்- தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

டெல்லி

இந்த தீர்ப்பை யாரும் வெற்றியாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. தோல்வியாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நமது நாட்டின் மாபெரும் பாரம்பரியம், அமைதி , ஒற்றுமை, நல்லெண்ணத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும், அதை நாம் அனைவரும் மேலும் பலப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் மோடி

டெல்லி

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அனைவரும் ஒருமித்த உணர்வுடன், நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

டெல்லி

நாட்டின் நலனையும், நீதித்துறையின் மாண்பையும் மனதில் கொண்டு அனைத்துத் தரப்பினரும் இந்த தீர்ப்பை ஒருமனதார வரவேற்க வேண்டும்.

டெல்லி

இந்த தீர்ப்புக்காக நாடு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறது. தீர்ப்பை நல்ல முறையில் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பினரும் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது

டெல்லி

அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது யாருக்கும் வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை பிரதமர் நரேந்திர மோடி

கர்நாடகாவில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

டெல்லி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சமரசம் தோல்வியில் முடிந்தது. சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது, இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது

டெல்லி

அயோத்தி வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர்

டெல்லி

அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வந்தது

டெல்லி

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூரியது. இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர்

டெல்லி

1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் வழக்கின் நோக்கம்

டெல்லி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு நாளை வர உள்ள நிலையில், இன்று காலைதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உபி, மாநில தலைமை செயலாளருடன் அம்மாநில பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை செய்தார்.

டெல்லி

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நவம்பர் 17ம் தேதி முடிய உள்ள நிலையில் நாளை தீர்ப்பு

டெல்லி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளனர்

டெல்லி

அயோத்தி வழக்கு 40 நாட்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. விடுமுறை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது

டெல்லி

அயோத்தி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 40 நாட்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது

லக்னோ

அயோத்தியை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து அங்கு தடை செய்யப்பட்டுள்ளது

டெல்லி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதால் மாநிலங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது

லக்னோ

நாளை தீர்ப்பு வருவதை அடுத்து உத்தர பிரதேசத்தில் பல்வேறு அடுக்குகளாக பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்காக 4000 பாராமிலிட்டரி படைகள் உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்

லக்னோ

உத்தர பிரதேசத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை

தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த காவலர் உடல் தகுதி தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ளதால் நடவடிக்கை

அயோத்தி வழக்கு: நாளை தீர்ப்பு வர உள்ளதால் நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு அயோத்தியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் உத்தர பிரதேசம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

அயோத்தி வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது ; தீர்ப்பை அடுத்து நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed