தீபக்கை மறுபடியும் பார்த்ததும் பயமும் தயக்கமும் வந்துடுச்சு தென்றல் தீபக் ஸ்ருதி கலாட்டா!

ஏழ்மையில் இருந்தாலும், படிப்பின் மூலம் தனக்கு மதிப்பு கிடைக்கும் என்பதற்காகப் படிப்பில் கவனம் செலுத்தி வரும் பெண். சித்தி கொடுமை ஒருபக்கம் இருந்தாலும், குடும்பத்திற்காகவே உழைத்துக்கொண்டிருக்கிற பெண். அவளின் குணம் பிடித்துப்போய் பல பிரச்னைகளுக்கிடையில் அவரைத் திருமணம் செய்யும் ஹீரோ.

எந்த அளவுக்கு பிறந்த வீட்டில் கஷ்டப்பட்டாளோ, அதே அளவுக்கு சந்தோஷத்தை இரட்டிப்பாகக் கொடுக்கும் கணவன். ஐந்து வருடத்திற்குப் பிறகு சந்தோஷமாக தாய்மை அடைவதோடு, தென்றல் சீரியல் சுபம் சுபம் சுபம். இடையிடையே சித்தி கொடுமைகள், வயதானவரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் வீட்டார்... இப்படிப் பல ட்விஸ்டுகளைக் கொண்டதாக இருந்தது, தென்றல். இந்த சீரியலில் தமிழ் குட்டிமா கேரக்டரில் நடித்த தீபக், ஸ்ருதி இருவரையும் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள டான்ஸ் கஃபேவில் சந்திக்க வைத்தோம்.