ஆலம் விழுது கருவேலங்குச்சி நாயுருவி வேர் பற்களைக் காக்கும் இயற்கை பிரஷ்கள்

வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (24/12/2012)

கடைசி தொடர்பு:18:09 (24/12/2012)

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பாலியல் பலாத்கார  முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,"
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் கிராமத்தைச்  சேர்ந்த  சௌந்தரராஜன் என்பவரின் மகள் மாணவி புனிதா 20.12.2012 அன்று  பாலியல்  பலாத்கார முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு  உயிரிழந்தார் என்ற  செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு  எனது ஆழ்ந்த  இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில்  உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண  நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், டி.கொத்தனூர்  தரப்பு, நார்த்தனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பையன் என்பவரின் மகன் முனுசாமி  23.12.2012 அன்று  ஓசூர் வட்டம்,  பார்த்தகோட்டா கிராமம் அருகே காட்டு யானை  தாக்கியதில் உயிரிழந்தார்  என்ற செய்தியையும்; கோயம்புத்தூர் மாவட்டம், எட்டிமடை  கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி ராமாத்தாள் 23.12.2012 அன்று  சொரிமலை காப்புக் காடு அருகே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார் என்ற  செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மரணமடைந்த முனுசாமி மற்றும் ராமாத்தாள் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின்  குடும்பங்களுக்கு வனத்துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க  உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க